அரசின் உத்தரவினை மீறியது ப்ரீமா -ஒருபோதும் கோதுமை மா விலை குறையாதாம்

அரசின் உத்தரவினை மீறியது ப்ரீமா -ஒருபோதும் கோதுமை மா விலை குறையாதாம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையினை குறைக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கோதுமை மா விற்பனை முகவர்களுக்கும் அறியப்படுத்தியுள்ளதாக ப்ரீமா தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கடந்த 6 ஆம் திகதி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தினால் கோதுமை மா நிறுவனங்கள் அதிகரித்தன.

எனினும், அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையைக் குறைத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பழைய விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு நேற்றைய(11) தினம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.