பிரதமர் தலைமையில் வீடமைப்பு திட்டங்கள் இன்று மக்கள் பாவனைக்கு

பிரதமர் தலைமையில் வீடமைப்பு திட்டங்கள் இன்று மக்கள் பாவனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் குறைந்த அடிப்படை வசதிகளுடைய பகுதிகளில் அமைக்கப்பட்ட 3 வீடமைப்பு திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுவதாக பெருந்தெருக்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(13) பிற்பகல் 2.30 அளவில் இதற்காண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மினிஜய சேவன, ஹெலமுத்து செவன மற்றும் ரண்முத்து செவன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்பு திட்டங்களில் 3300 வீடுகள் உள்ளடங்குகின்றன.

இதற்காக அரசாங்கம் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)