ஈரான் மீது சவுதி குற்றச்சாட்டு

ஈரான் மீது சவுதி குற்றச்சாட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவுதி அரேபியா அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஈரானின் நிதி உதவியில் செய்யப்பட்டதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி குறித்த இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபிய பாதுகாப்பு படை நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அரம்கோ நிறுவனம் மீது மேற்கொள்ளட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் காட்சி படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல்கள் ஈரான் நிதி உதவியில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் யெமனில் இருந்து தாக்குதல் நடத்தியிருக்க முடியாது எனவும் இந்த தாக்குதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வடக்கில் இருந்து நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க தரப்பில் இந்த தாக்குதலை நடத்துவார்கள் ஈரான் என குற்றம் சாட்டியிருந்த நிலையில் தாம் அந்த தாக்குதல்களை நடத்தவில்லை என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரோஹானி தெரிவித்திருந்தார்.