பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் விசேட சந்திப்பு; புதிய கூட்டணியில் சஜித்

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் விசேட சந்திப்பு; புதிய கூட்டணியில் சஜித்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கட்டிடத்தொகுதியில் பரந்த கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் கட்சி தலைவர்களான ரவூப் ஹக்கீம் , சம்பிக்கரணவக்க, பழனிதிகாம்பரம், ரிஷாத் பதியூதின் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுமானால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் இணைந்துக்கொண்டு பரந்த கூட்டணி ஒன்றினை உருவாக்கி அதன் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்போம் என்ற யோசனை இவர்கள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் மைச்சர்கள் படாலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகம்பரம், ரிஷாட், மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தமது ஆதரவை சஜித் பிரமதாஸவுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், பிரபல்யமான வேட்பாளர் யார் என்பதை சிறூபான்மை கட்சிகள் ஏற்கனவே பிரதமரிடம் கூறியுள்ளதாகவும், அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.