தாமரை தடாக நிர்மாண பணிகளில் இருந்து ALIT நிறுவனம் விலகியது

தாமரை தடாக நிர்மாண பணிகளில் இருந்து ALIT நிறுவனம் விலகியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் இருந்து சீனாவின் ALIT நிறுவனம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கமால் விலக்கி கொண்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் தனக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய முன்னெடுத்த விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு சீனாவின் ALIT நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 16ஆம் திகதி கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.