பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கோபமடைந்த தர்ஷனின் காதலி

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கோபமடைந்த தர்ஷனின் காதலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். 

தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் மிக கடுமையானதாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியாளர்கள் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என கூறப்பட்டது.

இதற்கு போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷனின் காதலி சனம் செட்டி மிகவும் கோபமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், மிளகாய் சாப்பிட வைத்தது தர்சனின் உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது நியாயமில்லை. இதை நான் பார்க்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார்.