இலங்கையின் மெகா – உட்கட்டமைப்பு முதலீட்டுக்கு இந்தியா தயார்

இலங்கையின் மெகா – உட்கட்டமைப்பு முதலீட்டுக்கு இந்தியா தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் மெகா – உள்கட்டமைப்பு முயற்சிகளில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறை முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்

‘இந்தியாவின் சக்திவாய்ந்த இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry) முதன்முறையாக இலங்கையில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தனது புதிய முதலீடுகள் மற்றும் நிதி உந்துதலைகளினை செய்வதாக வெளிப்படுத்திய நிலையில் மெகா – உள்கட்டமைப்பு முயற்சிகள் உட்பட சிறிய செலவினங்கள் கொண்ட முக்கிய முதலீட்டு திட்டங்களில் இந்திய தொழில்துறை முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தியாவுடன் நெருக்கமாகவும் நேச நாடாகவும் அதனுடனான ஒத்த சூழல் இருப்பதால் இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை ஒரு விருப்பமான இடமாக மாறி வருகிறது’ என பிரபல வர்த்தகரும் சென்னை மோஹான் முத்தா ஏற்றுமதி நிறுவனத்தின் பணிப்பாளருமான பிரபுல் குமார் முத்தா கூறினார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தக பிரதிநிதிகள தலைமை தாங்கி இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரபுல் குமார் முத்தா தனது தூதுக்குழு உறுப்பினர்களுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீடித்த இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம், கூட்டுறவு மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நேற்று முன் தினம் அவரது அமைச்சில் சந்தித்த போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் இச்சந்திப்பின் போது கூறுயதாவது: ‘இலங்கையில் இந்திய நிபுணத்துவத்தை பெரிய அளவிலான திட்டங்கள் ஊடாக காண்பிப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம.; இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக சம்மேளனமாகும.; இது 291 பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய அமைப்புகளிலிருந்து தனியார் மற்றும் அரச பொதுத் துறை மற்றும் சிறிய நடுத்தர தொழில்துறை நிறுவனங்களில் 9100 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் 300000 க்கும் மேற்பட்ட மறைமுக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இலங்கைக்கு புதியதல்ல, இதற்கு முன்னரும் இதன் வர்த்தக பிரதிநிதிகள் கொழும்புக்கு வருகை தந்துள்ளதுடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளனர்;.

இலங்கையில் சுத்திகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்பம் பூங்காக்கள், உப்புநீக்கும் ஆலைகள், மருந்துவ வளையங்கள், கொள்கலன் முனையங்கள் மற்றும் தொழில் பயிற்சி வசதிகள் போன்ற பெரிய அளவிலான திட்டங்களை பாதுகாப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். வெளிநாடுகளில் இதுபோன்ற பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்க இந்தியாவில் பல வழிமுறைகள் உள்ளன.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இலங்கையிலும் இதுபோன்ற திட்ட நிதிகளுக்கு உதவியாக இருக்க முடியும் என்றார். பிரபல வர்த்தகரும் சென்னை மோஹான் முத்தா ஏற்றுமதி நிறுவனத்தின் பணிப்பாளருமான பிரபுல் குமார் முத்தா ‘இலங்கையில் பாரிய திட்டங்களை மேற்கொள்வதற்கான இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் ஆர்வத்தை நாம் வரவேற்கின்றோம.; இலங்கையில் இந்திய நிறுவனங்களின் வர்த்தக செயற்பாடுகள் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

2005-2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இந்தியா நான்காவது பெரிய அந்நிய நேரடி முதலீட்டை வழங்கியிருந்தது. எமது அரசாங்கம் இந்தியாவின் (அன்னிய) நேரடி முதலீட்டை வரவேற்கிறது, அதன் சார்பாக நானும் எனது அமைச்சும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினர் உட்பட இந்திய முதலீட்டாளர்களுக்கு எங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.

இந்திய முதலீட்டாளர்கள் இலங்கைக்குள் முதலீடு செய்வது போலவே, அதிகமான இலங்கை நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. இலங்கையில் இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 28 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இலங்கை முதலீட்டு சபையின் புள்ளிவிபரத்தின்படி, 2005-2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இந்தியா நான்காவது பெரிய அந்நிய நேரடி முதலீட்டை வழங்கியுள்ளது.

2005-2017 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒட்டுமொத்த இந்திய முதலீடு 1.16 பில்லியன் அமெரிக்க டொலர்கள ஆகும். சுற்றுலா மற்றும் ஹோட்டல், பெற்ரோலியம்-சில்லறை விற்பனை, உற்பத்தி, ஆதனத்துறை (ரியல் எஸ்டேட்) தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் நிதி சேவைகள் ஆகியவை இந்தியாவின் நேரடி முதலீட்டின் முக்கிய முதலீட்டு துறைகள ஆகும’; என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.