புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையின் போது ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 33 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ பகுதி நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.