கொழும்பு – பதுளை வரை சேவையில் இணையும் கடுகதி ரயில்

கொழும்பு – பதுளை வரை சேவையில் இணையும் கடுகதி ரயில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பில் இருந்து பதுளை வரை ‘தெனுவர மெனிக்கே’ கடுகதி ரயில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தமையினால் தூரப்போக்குவரத்து ரயில் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் புதிய மேலதிக ரயில்களை சேவையில் இணைக்க தீர்மானித்ததாக டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இம்மாத இறுதிக்கு முன்னர் குறித்த ரயில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வாரத்தில் ஒரு நாளில் மாத்திரம் கொழும்பு முதல் பதுளை வரை குறித்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடுத்த நாள் மீண்டும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.

குறித்த புதிய கடுகதி ரயில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மூன்று அதிசொகுசு பெட்டிகளுடன் மொத்தமாக 8 பெட்டிகளைக் கொண்டதாக குறித்த ரயில் அமைந்துள்ளது.