இலங்கை இயக்குனரின் இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள்

இலங்கை இயக்குனரின் இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையைச் சேர்ந்த அஜய் லெட்சுமியின் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ”லொக் அப் டெத்” . இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாரத்தில் நடித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ்

இந்த படத்தில் இன்னும் பல இலங்கையை சேர்த்தவர்கள் பணியாற்றியுள்ளனர். ”லொக் அப் டெத்” படத்தின் first look நடிகர் பாபி சிம்ஹவால் வெளியிடப்பட்டது. இந்த படம் நவம்பர் மாதம் வெளிவருமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் அஜய் லெட்சுமி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.