கோட்டா ஜனாதிபதியானால் ரணிலின் பதவி பறிபோகும் – மஹிந்த [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் கட்டாயமாக பிரதமர் பதவியில் மாற்றம் நிகழும். அதாவது பிரதமர் அமைச்சரவையில் இருந்து நீங்குவார். அதன் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இன்றைய(15) நிகழ்வின் போதே முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்கட்சித் தலைவருமாகிய மஹிந்த ராஜபக்‌ஷ கருத்து
வெளியிட்டிருந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் பொதுவாக ஜனாதிபதியை நியமத்து பின்னர் பிரதமரை நியமிக்கும் முறைமை ஒன்று தோன்றியிருந்தது. இது வரலாற்றின் முதல் முறையாக நிகழ்ந்ததொரு சம்பவமாகும் அவ்வாறு இருக்க கோட்டபாய ராஜபக்ஷ ஜனதிபதியாகினாலும் அவ்வாறே பிரதமர் மாற்றம் இடம்பெறுமாஅது சாத்தியம் என நினைக்கிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.