கிழக்கு அரசியலின் இரு புள்ளிகள் சஜித்திற்கு ஆதரவு

கிழக்கு அரசியலின் இரு புள்ளிகள் சஜித்திற்கு ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை மற்றும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஜெமீல் ஆகியோர் இன்று(16) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அணியிலிருந்து உதுமாலெப்பையும், அமைச்சர் ரிஷாட் அணியிலிருந்து ஜெமீலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பக்கம் மீண்டும் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.