தசுனுக்கு அணியில் வாய்ப்பு இல்லையா? ; கடும் கோபத்தில் ரசிகர்கள்

தசுனுக்கு அணியில் வாய்ப்பு இல்லையா? ; கடும் கோபத்தில் ரசிகர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் இவ்வாறான ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் தொடரில் இருந்து நிரோஷன் டிக்வெல்ல விலகிக் கொண்ட காரணத்தால் தான் தசுன் ஷானக்கவுக்கு தலைவர் பதவியைக் கொடுத்திருந்தோம். அதை வைத்து நிரோஷன் டிக்வெல்லவிடம் இருந்து தசுன் ஷானக்கவுக்கு உப தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கூறுவது சாதாரணம் கிடையாது.

இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் தசுன் ஷானக்க தலைவராகச் செயற்பட்டு அணியை சிறந்த முறையில் வழிநடத்தினார் இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கூறுவது சாதரணம் இல்லை என அசந்த டி மெல் தெரிவித்த கருத்தால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அணிக்கு தலைவராகவோ அல்லது உப தலைவராகவோ நியமிக்கப்படுகின்ற வீரர் தொடர்ந்து அணியில் விளையாடுகின்ற வீரராக இருக்க வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மைகாலமாக இலங்கை அணியில் சிறந்த பங்களிப்பை வழங்கிவரும் தசுன் ஷானக்கவுக்கு இவ்வாறான கருத்து தெரிவித்தமையானது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் பொருளாகியுள்ளது.

சிறந்த தலைமைத்துவம் மற்றும் சகலதுறையிலும் பிரகாசிக்கின்ற வீரர் ஒருவருக்கு இவ்வாறான நிலை ஏற்படுமாக இருந்தால் எதிர்கால இலங்கை கிரிக்கெட் கேள்வி குறியாகும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.