வெடிகுண்டு பீதிக்குப் பின்னால் தேர்தல் பிரசாரம்

வெடிகுண்டு பீதிக்குப் பின்னால் தேர்தல் பிரசாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் அண்மையில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்த வெடிகுண்டு பீதிக்குப் பின்னால் தேர்தல் பிரசாரமொன்று இடம்பெறுகிறதா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

அண்மையில் கொழும்பு மட்டக்குளியில் உள்ள பாடசாலைக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றினால் அந்த பகுதியில் வெடிபொருள் பீதி ஏற்பட்டது.

தேடுதலின் பின்னர், எந்தவொரு வெடிபொருளும் மீட்கப்படவில்லை.

இப்படியான பீதியை ஏற்படுத்தி அதனை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகள் இடம்பெறலாம் என்கிற கோணத்தில் விசாரணைகளை நடத்தும்படி தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸாருக்கு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.