அணியில் தேவையற்ற தலையீடு; இலங்கை அணி வெற்றி வாகை சூடுமா?

அணியில் தேவையற்ற தலையீடு; இலங்கை அணி வெற்றி வாகை சூடுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இம் மாதம் 27ஆம் திகதி அடிலெய்ட்டில் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினை இருபதுக்கு – 20 தொடரில் 3:0 என்ற கணக்கில் தோற்கடித்த வேகத்துடன் இலங்கை அணியானது அடுத்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் விளையாட்டிய பெரும்பாலான வீரர்கள் அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் விளையாடவுள்ளனர்.

இதேவேளை, அணியின் தலைமை மற்றும் சில சிரேஷ்ட வீரர்களின் உள்வாங்கள் இடம்பெற்றுள்ளது.

தசூன் சானக்க தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் மிகவும் சுகந்திரமாகவும் அவர்களுடைய இயல்பான திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த சுகந்திரமான சூழ்நிலை இந்த தொடரில் தொடர்ந்தால் மட்டும் தான் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என கிரிக்கெட் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.

மாறாக சிரேஷ்ட வீரர்களுடைய தலையீடு இளம் வீரர்களுக்கு அழுத்தமாக அமையும் பச்சத்தில் இலங்கை அணியின் வெற்றியில் பாதிப்பை செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சர்வதேச இருபதுக்கு – 20 தொடரில் மோதவுள்ள 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்க தலைமையிலான இக் குழாமில் குசல பெரேரா, குசல் மெண்டிஸ், தனூஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, தசூன் சானக்க, செஹான் ஜெயசூரிய, பானுக்க ராஜபக்ஸ, ஓசாத பெர்னாண்டோ, வசிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமார, இசுறு உதான, லஹிரு உதான, மற்றும் கசூன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.