பயங்கரவாத தாக்குதல் சதி – மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க பணிப்பு

பயங்கரவாத தாக்குதல் சதி – மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க பணிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையரான மொஹமட் நிஷாம்டீனுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக வழங்க அந்நாட்டு அரசியல்வாதி மார்க் லெத்தமுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபருக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுவதாகவும், தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்று பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், இறுதியில் இது தனிப்பட்ட முரண்பாடாக மாறி குறித்த தகவல்களில் எவ்வித உண்மைப்பாடும் இல்லை என குறித்த இளைஞன் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.