நான் சஹ்ரானை சந்தித்தது உண்மை.. அதில் தவறு இல்லை – ஹகீம் அதிரடி அறிக்கை

நான் சஹ்ரானை சந்தித்தது உண்மை.. அதில் தவறு இல்லை – ஹகீம் அதிரடி அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் ரவுப் ஹகீம் மற்றும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீம் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ரவுப் ஹகீம் இனால் இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“..நான் முஸ்லிம் இனத்தினை சேர்ந்த இஸ்லாம் கொள்கையினை கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவன். சஹ்ரான் ஹஷீம் என்பவர் பிறப்பிலேயே முஸ்லிம். இஸ்லாம் பக்தர் ஒருவர்.
தீவிரவாதி எந்தவொரு இனத்திற்கும் பொதுவானது என உலகம் மற்றும் இலங்கை வரலாற்றில் பார்க்கையில் தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதொன்றாகும்.

சஹ்ரான் ஹஷீம் முஸ்லிம், இஸ்லாம் தீவிரவாதி என்பதனை நான் வாதிட்டுக் கூற வேண்டியதில்லை. பூமியில் ஒரு மனிதனுக்கு கடினமான விடயங்களில் ஒன்றுதான் மற்றவர்களைப் புரிந்துகொள்வது. நாட்டின் முக்கிய ஒரு அரசியல் கட்சியின் ஒரு தலைவராக, தனது இனத்தின் தனது மதத்தின் பிரிதொரு நபரை சந்திப்பதில் தவறுகள் உண்டா என நான் வினவுகிறேன்.

நாம் செய்யக்கூடாத ஒன்றைப் பற்றி நாம் கூடி கலந்துரையாடினால் தவறாகும். எனக்கு நினைவில் இருக்கும் மட்டு, அவர்கள் அன்று அவர்களுக்கு பிடிக்காத ஒருவருக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கை கொடுக்க வேண்டாம் எனக் கோரினார்கள்.இத்தகைய கோரிக்கைகள், முன்மொழிவுகள் அரசியலில் ஒன்றும் புதிதல்ல.

முடிவுகள் எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் சொல்வதனை கேட்பது ஒன்றும் தவறல்ல..” என தெரிவித்துள்ளார்.

புத்த பெருமான் கூறியுள்ளது போல் நீங்கள் காண்பது எல்லாம் உண்மையல்ல எனவும் குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.