கறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான ஆஸிப்.பத்திரிகைகள்

கறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான ஆஸிப்.பத்திரிகைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிகை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் பொலிசார் சோதனை நடத்தினர்.

அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிகை நிறுவனங்கள் குற்றம் சாட்டின. பத்திரிகைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும் ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.