எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை

எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று(21) கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, தற்போது தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்ட போதிலும், அது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை எதிர்வரும் காலங்களில் பிரதமர் ரணிலுடன் மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.