சாதாரணதர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம்

சாதாரணதர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள், அதிபரின் ஊடாகவும் தனியாருக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் அவர்களின் விலாசத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

COMMENTS

Wordpress (0)