மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசும் எனவும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக செயற்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.