ஜனநாயகத்தை பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுவோம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு, அதில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும். அதற்காகவே கடந்த அரசு கடுமையாக பாடுபாட்டது. ஜனநாயகம் நிலைத்தால் சமத்துவம் பேணப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியேற்கும்போது நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்தது. அராஜகத்தை ஒழித்து ஜனநாயத்தை நிலைநிறுத்தவே நல்லாட்சி அரசாங்கத்தின் பாதிக்காலம் கழிந்தது. அதற்கு நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த நாயகன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தடுத்து அதிரடியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து கட்டியெழுப்பிய ஜனநாயகத்தை மீண்டும் பாதாளத்துக்கு தள்ளிவிட முடியாது . எனினும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம சிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் அதற்கு பலம் கொடுத்த சஜித் பிரேமதாஸவும் ஏனைய சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் சுயாதீன நிதித் துறையின் பங்களிப்புடன் சதித் திட்டங்களை முறியடித்தனர்.
இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலானது ஜனநாயகத்திற்கும் அடிப்படைவாதத்திற்குமிடையோன போராகவே பார்க்க முடிந்தது. இதில் ஜனநாயகத்தை அடிப்படைவாதம் வென்றிருக்கிறது. இது நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகும்.
இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் ஜனநாயகத்தை நேசிக்கக் கூடியவர்கள். அந்த அடிப்படையிலேயே இந்த தேர்தலில் கோத்தபாய வென்றது எமது தோல்வியை ஏற்றுக்கொண்டு ஜனநாயக ரீதியில் ஆட்சியமைக்க அவர்களுக்கு இடமளித்தோம்.
அவர்கள் ஆட்சிபீடமேறிய விதம் பிழையானதாக இருக்கலாம். ஆட்சி செய்யும் முறை பிழையாகிவிடக்கூடாது. ஒரு நாட்டில் ஜனநாயகம் மேலோங்க பலமான எதிர்க்கட்சியும் சுயாதீன ஊடகத் துறையும் இருக்க வேண்டும். நல்லாட்சியில் இவ்விரு கூறுகளும் சிறப்பனதாக இருந்தன. நாம் காத்துவந்து இவ்விரண்டும் நிலைத்திருக்க வேண்டும். இந்த தேர்தலில் தோற்று விட்டோம் என்பதற்கா ஒதுங்கிவிட முடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்க தொடர்ந்தும் போராடவேண்டிய தேவை இருக்கிறது.
கடந்த காலங்களில் எமது ஜனநாயகப் போராட்டத்திற்கு ஊடகங்கள் பக்கபலமாக இருந்தன. தொடரும் காலங்களிலும் ஊடகங்கள் ஊடகநியமங்கள், தர்மத்துக்கு அமைவாக ஜனநாயகத்தை பாதுகாக்க செயற்படவேண்டும் என்பதே எமது அவாவாகும்.
தபால், தபால் சேவைகள் அமைச்சும் முஸ்லிம் சமயவிவகார அமைச்சும் கடந்த காலங்களில் நாட்டின் அமைதிக்காக பல்வேறு விதத்தில் பாடுபட்டன. இதற்கு ஊடகத்துறை பக்கபலமாக நின்றதை மறந்துவிட முடியாது. மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு இனநல்லிணக்கம், சகவாழ்வுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்து செயற்பட்டது. இதனை செயற்படுத்த ஊடகங்கள் பங்குதாரர்களாக இருந்தன. அவை பாராட்டத்தக்கதாகும். தொடரும் காலங்களிலும் ஊடகங்களின் அர்பணிப்பு இன்றியமையாததாகும்.
ரஷி ஹாஷிம்
முன்னாள் ஊடக செயலாளர்
தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சு