‘தல’ பெயரில் சுயேட்சை வேட்பாளர் – அரசியலில் அதிரடி

‘தல’ பெயரில் சுயேட்சை வேட்பாளர் – அரசியலில் அதிரடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயருடன் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து இப்போதிருந்தே உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைப் பெறுவது, கூட்டணியை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2-ம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் திகதியை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துவிட்டது.

இந்நிலையில் மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் என்பவர் அதிமுகவை அஜித் திமுக என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.