
இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேபாளத்தில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான டைக்கொண்டோ போட்டியில் ரனுக்க பிரபாத் இலங்கை சார்பில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றதோடு இரட்டையர் பிரிவிலும் மற்றொரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
நேபாளத்தின் மூன்று நகரங்களில் இடம்பெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று(02) பல பதக்கங்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. இதில் காத்மண்டு நகரில் நடைபெற்ற டைக்கொண்டோ போட்டியில் இலங்கை சார்பில் ஆண்களுக்கான 17–23 வயதுப் பிரிவின் பூம்சே போட்டியில் பங்கேற்ற ரனுக்க பிரபாத் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் வெற்றியீட்டினார்.
இந்நிலையில் இரட்டையர் பிரிவின் டைக்கொண்டோ பூம்சே போட்டியில் ரனுக்க பிரபாத் மற்றும் இசுரு மெண்டிஸ் தங்கப் பதக்கத்தை வென்றனர்.