டி20 போட்டியில் ஜொலித்து இன்று திருமணத்தில் இணைந்த இந்திய வீரர் [PHOTOS]

டி20 போட்டியில் ஜொலித்து இன்று திருமணத்தில் இணைந்த இந்திய வீரர் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய அணியின் மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரரும் , கர்நாடக அணியின் தலைவருமான மணிஷ் பாண்டே தமிழ் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

நேற்றிரவு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

நேற்றிரவு போட்டியில் ஜொலித்த அவர், இன்று காலை மும்பையில் தமிழ் நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.