24 வருடங்களுக்குப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வரும் அஜித் படம்

24 வருடங்களுக்குப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வரும் அஜித் படம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அஜித் நடிப்பில் 24 வருடங்களுக்கு முன் வெளியான படம் ஒன்று, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடித்து, வி.சி.குகநாதன் இயக்கித்தில் 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த படம், `மைனர் மாப்பிள்ளை’. 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது.

இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.

24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வி.சி.குகநாதன்இயக்கியுள்ளார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.