பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை நடைபெறுகின்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறவுள்ள நிலையில் இறுதி நாளன்று மாணவர்கள் யாரும் பொது சொத்துக்களுக்கோ ஏனையவர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறவுள்ள நிலையில் 12 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பரீட்சை நிலையங்களிலோ அல்லது பரீட்சை நிலையங்களுக்கு வெளியிலோ பரீட்சார்த்திகள் அமைதியற்ற முறையில் நடப்பார்கள் என்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அதே போன்று ஏனைய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடத்தல் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் என்பனவும் பரீட்சை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கவேண்டிய குற்றமாகும்.

குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் இரத்துச்செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.