மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பு

மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை(17) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் நிலை உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் கண்டி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகமானது இன்று மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.