சேர் கார்பில்ட் சோபர்ஸ் விருது – 2019

சேர் கார்பில்ட் சோபர்ஸ் விருது – 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான, ‘சேர் கார்பில்ட் சோபர்ஸ் விருது” (Sir Garfield Sobers Award) இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கடந்த வருடத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் மகளிருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆடவருக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட் கமின்ஸ் (Pat Cummins)- அவுஸ்திரேலியா – சிறந்த டெஸ்ட் வீரர்

ரோஹித் சர்மா (Rohit Sharma) – இந்தியா – சிறந்த ஒரு நாள் வீரர்

தீபக் சாஹர் (Deepak Chahar) – இந்தியாவின் – சிறந்த இருபதுக்கு-20 வீரர்

மார்னஸ் லபுஷான் (Marnus Labuschagne) – அவுஸ்திரேலியா – வளர்ந்து வரும் வீரர்

கைலி குயெட்சர் (Kyle Coetzer) – ஸ்காட்லாந்து – சிறந்த இணை கிரிக்கெட் வீரர் (டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடு)

விராட் கோஹ்லி (Virat Kohli) – இந்தியா – கிரிக்கெட்டின் கணவான் தன்மையை வெளிப்படுத்தியமைக்கான ‘Spirit of Cricket” விருது

ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (Richard Illingworth) – இங்கிலாந்து – சிறந்த நடுவர்