சீனாவில் புதிய மருத்துவமனை இன்று திறந்து வைப்பு [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  சீனாவில் பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த மருத்துவமனையானது சீன அரசாங்கத்தினால் கடந்த 8 தினங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வுஹான் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மருத்துவமனை ஆயிரம் படுக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் கொரோன வைரஸ் தொற்றாளர்களுக்கு சிறந்த வகையில் சிகிச்சை வழங்குவதற்காக இது பெரிதும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கொரொனா வைரஸ் தொற்றுக்காரணமாக பிலிப்பைன்ஸில் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

இது குறித்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு வெளியில் பதிவான முதல் மரணமாக கருதப்படுகிறது.

அதேநேரம், சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இதுவரை கொரொனா வைரஸ் தொற்று காரணமாக 150 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.