பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி அறிவிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்த நாள் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அரசாங்க பேச்சாளரும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இதன்படி பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கல் மார்ச் 11 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதிவரை தேர்தல் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

அத்துடன், பொதுத்தேர்தலின் பின்னர் 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் மே மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் நான்கரை வருட காலத்தின் பின்னர் அதனை ஜனாதிபதியினால் கலைக்க முடியும்.