ஞானசார தேரருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுபலசேனா பெளத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்திற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலைய வளாகத்தில பெளத்த விகாரையில் தனியிருந்த பௌத்த பிக்குவின் பூதவுடன் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்தி சிறிஸ்கந்தராஜா தாக்கல் செய்திருந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இனத்போது நீதிபதிகள் ஞானசார தேரரை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.