ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி : நாடகம் முற்றுப் பெறுகிறது

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி : நாடகம் முற்றுப் பெறுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றை வீடியோ பதிவு செய்து நாட்டிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளே இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் எனவும் குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டி அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு இந்த விடயம் தெரியும் என குறிப்பிட்ட அவர், இதற்குப் பின்னர் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என நினைக்கிறேன் என்றும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழுப் பொறுப்புகூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுஜன முன்னணியுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் இனியும் சுயாதீனமாக நடக்குமா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.