புர்கா நிரந்தரமாக தடைசெய்யப்படுமா? மதரஸாக்கள் அமைச்சின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

புர்கா நிரந்தரமாக தடைசெய்யப்படுமா? மதரஸாக்கள் அமைச்சின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

குறித்த குழு நேற்று விசேட அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

3 வருடங்களுக்குள் மதரஸா நிறுவனங்களில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி முறைக்கு கொண்டுவர வேண்டும், பொதுவான கல்வித்திட்டம், ஏற்றுக்கொள்ளப்பட்ட துறை சார்ந்தவர்களால் இஸ்லாமிய உரை புத்தகங்களைத் திருத்துதல் உட்பட பல பரிந்துரைகள் இதில் அடங்கும்.

மேலதிகமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய முன்னேற்றங்கள், மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துதல், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துதல் மற்றும் தேசிய பாதுகாப்பு கொள்கையை நிறுவுதல், பயங்கரவாத தாக்குதல்களின் சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும் மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதனை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளது.