ஒரு இலட்சத்தினையும் தாண்டும் நிலையில் தங்க விலை

ஒரு இலட்சத்தினையும் தாண்டும் நிலையில் தங்க விலை

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று(21) பவுணுக்கு 400 ரூபாயால் உயர்ந்து 79,200 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்வடைந்து வருகிறது.