தேர்தலில் இருந்து விலகும் ரணில்; சஜித் தரப்பு எடுத்த முடிவு

தேர்தலில் இருந்து விலகும் ரணில்; சஜித் தரப்பு எடுத்த முடிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு தேசியப்பட்டியல் நியமனம் அவசியம் என்று
சஜித் தரப்பிடம் வலியுறுத்தியுள்ளதாக சிங்கள் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய சக்தி எனும் புதிய அரசியல் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பில், சபாநாயகர் கருஜயசூரிய, நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகியோருக்கே தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரணில் கோரியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்குவதற்கு சஜித் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.