மஹிந்தவை வீழ்த்த viber தொழில்நுட்பமே கைகொடுத்தது – சந்திரிகா

மஹிந்தவை வீழ்த்த viber தொழில்நுட்பமே கைகொடுத்தது – சந்திரிகா

வைபர்(Viber) என்ற பிர­பல்­ய­மான கைய­டக்கத் தொலை­பேசி அப்­ளி­கே­சனைப்(app) பயன்­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ­விற்கு எதி­ரான தரப்­புக்­கைளை ஒன்­றி­ணைத்­த­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க  இந்­திய ஊடகமொன்­றுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

செய்­மதித் தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்தி உரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல்­களில் உண்­மை­யில்லை எனவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

வைபர்(viber) தொழில்­நுட்­பத்தை ஊட­றுக்கும் தொழில்­நுட்பம் மஹிந்­த­ அரசாங்கத்திடம் இருக்­க­வில்லை என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஏனைய அனைத்து தொடர்­பாடல் வழி­மு­றை­க­ளையும் ஊட­றுத்து மஹிந்த தரப்பு ஒட்டுக் கேட்­ட­தாகவும் அவர் இச்செவ்வியில் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

வைப­ரையும் ஊட­றுத்து ஒட்டுக் கேட்­டி­ருந்தால் நாம் இன்று உயி­ருடன் இருந்­தி­ருக்க முடி­யாது. வெளி­நாட்டு சக்­திகள் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தா­கவும் வெளி­நாட்டு சக்­திகள் வழி­ந­டத்­தி­ய­தா­கவும் வெளி­யான தக­வல்­களில் எதுவித உண்­மையு­மில்லை.

மஹிந்­த­விற்கு எதி­ராக சிவில் சமூகம் எழுச்சி பெற்­ற­து. ஐக்­கிய தேசியக் கட்சி உட்பட்ட எதிர்க்­கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஒரே முனையில் போராட்­டத்தை நாம் முன்னெடுத்தோம். இதன் கார­ணத்­தினாலேயே மஹிந்­தவை தோற்­க­டி­க்க முடிந்தது.

மஹிந்­த­விற்கு நிக­ரான ஒரு­வரை தெரி­வதில் சிக்கல் நிலைமை காணப்­பட்­ட­து. மிக நீண்­ட­கா­ல­மாக செயற்­பட்ட கார­ணத்­தினால் மைத்­தி­ரி­பால சிறி­சேன இதற்கு பொருத்தமானவர் என நாம் கருதினோம்.

எவரும் 100 வீதம் சரியானவர்கள் இல்லை என்ற போதிலும் மிகவும் பொருத்தமானவருக்கு ஆதரவளித்து பொது வேட்பாளராக நிறுத்தினோம் என்றும் கூறியிருந்தார்.

(riz)