நாய், பூனை கறிக்கு தடை விதித்தது சீனா

நாய், பூனை கறிக்கு தடை விதித்தது சீனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்குகளின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பிறகு சீன அதிகாரிகள் வன விலங்குகளின் இறைச்சியை விற்பதற்கு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷென்ஸென் நகரம், வன விலங்குகளோடு நாய் மற்றும் பூனை இறைச்சியையும் விற்கக் கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1 முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மக்கள் நாகரிக வளர்ச்சியை இந்த தடை காட்டுவதாகவும் ஷென்ஸென் நிர்வாகம் கூறியுள்ளது.

விலங்குகள் நல அமைப்பான Humane Society International இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளது.

ஆண்டுக்கு 1 கோடி நாய்களும் 40 லட்சம் பூனைகளும் சீனாவில் கொல்லப்பட்டு இறைச்சி விற்பனை வணிகம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றன.