ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய கொரோனா

ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளின் கொரோனா காரணமாக உருவாகி இருக்கின்ற முடக்கத்தினால் வளிமாசடைதல் காரணமாக மரணிக்க இருந்த 11,300 மரணங்கள் தடுக்கப்பட்டிருப்பதாக சுத்தமான வளிமண்டலம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் ஐரோப்பா மற்றும் பிர்தானியாவில் வாழ்கின்றனர். அந்நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்த நடவடிக்கைகளுக்காக வீதிகளை பயன்படுத்துவோரின் அளவு மிக குறைந்துள்ளது.
தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது மட்டும் இன்றி நிலக்கரி பாவனை இன்மையினால் புவி வெப்பமாகுதல் அளவு 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்படுவதற்காக பல்வேறு பருவ நிலை மாநாடுகள் நடத்தப்பட்டாலும் இன் நிலமையை அடைந்து கொள்ள முடியாமல் போனது. குறித்த அடைவை அடைந்து கொள்ள முடியாது என தெரிவித்த விடயத்தை கொரோனா வைரஸ் மாற்றியமைத்து இந்த உயிர்களை காப்பாற்றியுள்ளது.

இதுமட்டும் இன்றி மாசடைந்த வளிமண்டலம் காரணமாக சுவாசத்தில் ஏற்படும் நோய்கள், வேலைக்கு வரமல் சுகயீன விடுப்பு எடுப்பவர்களின் தொகை குறைந்து 13 இலட்சம் சுயீன விடுப்பு நாட்கள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்படுவோர் வைத்தியசாலை செல்லவேண்டிஇருந்துருக்கும் அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

வளிமாசடைவு காரணமாக புதிதாக 6000 குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருப்பர் அதுவும் கொரோனா முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்தை தாண்டி இருந்தாலும் நீண்டகாலத்தை பார்க்கின்ற போது இழந்த இழப்புகளை விட வரவிருந்த பேர்இழப்புகளை தடுத்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிப்பதாக இதற்கு பொருப்பாக இருந்த சாரடி டி மெட்டியாஸ் என்ற இத்தாலியை
சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.