கூகுள், பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் இந்த ஆண்டு முழுவதும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி

கூகுள், பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் இந்த ஆண்டு முழுவதும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் காலத்தை நீட்டித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் முழு உலகையும் உலுக்கி வருகின்ற நிலையில், உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் காலத்தை நீடித்து அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து, ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது, இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஜூலை 6 ஆம் திகதி வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியிருந்த பேஸ்புக் நிறுவனம், பணியாளர்கள் விரும்பினால் இந்த ஆண்டு இறுதி வரையிலும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.