IPL போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்

IPL போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஐபிஎல் தொடரை இலங்கை நடத்த விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.