அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு

அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு

அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவரது அரசின் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வந்தது.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக நாட்டை அவர் முன்னேற்ற தவறி விட்டதாகக் கூறி, மூத்த அமைச்சர் மால்கம் டர்ன்புல் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, அவர்களுள் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறிய உட்கட்சி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், டோனி அபாட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளும், டர்ன்புல்லுக்கு 54 வாக்குகளும் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து, மால்கம் டர்ன்புல், அவுஸ்திரேலியாவின் 29வது பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

(riz)