உங்கள் பிள்ளை பாடசாலை செல்ல தயாரா; இதை அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் பிள்ளை பாடசாலை செல்ல தயாரா; இதை அறிந்துகொள்ளுங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் போது மாணவர்கள் நடந்து கொள்ளும் விடயங்கள் தொடர்பில் பெற்றோர் ஆகிய நீங்கள் அறிந்திருப்பது அவசியமாகும்.

அந்தவகையில்  ஒன்று கூடுதல் அல்லது குழுவாக இணைந்து செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஓய்வு நேரத்தை ஒரே நேரத்தில் வழங்காமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்குமாறு, பாடசாலை பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்ற கூடிய அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு, பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது முடிக்கும் போதும் மாணவர்கள் ஒன்று கூடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை விஞ்ஞான பரிசோதனை மற்றும் பற் சோதனைகளை மீள் அறிவிப்பு வரை நடத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு மாணவர்களை வழிநடத்துவது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களகிய எமது பொறுப்பு என்பதை கருத்தில் கொள்வோம்.