கொவிட்- 19 சவால்களுக்கு மத்தியில் டிஜிட்டல் கற்பித்தல் முறைகளை முன்னெடுக்கும் Alethea

கொவிட்- 19 சவால்களுக்கு மத்தியில் டிஜிட்டல் கற்பித்தல் முறைகளை முன்னெடுக்கும் Alethea

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களும்இலங்கையில் பல அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் பாடத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும், Alethea Schoolமற்றும் Alethea International school,  ஏற்கனவே தொழில்நுட்பம் ஊடாக கற்றல் செயன்முறையை வழிநடாத்தும் கட்டமைப்பை 2019 ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வந்தமையால் இந்த சவாலை வெற்றிகரமாக கையாண்டது.

தொழில்நுட்பத்தை நோக்கிய புதிய தலைமுறைக்கான கல்விக்கான இப் பாடசாலையின் அர்ப்பணிப்பு மற்றும் மிகவும் அவசியமான புதிய தலைமுறைக்கான கற்றல் முறைகளை முன்னரேஇனங்கண்டு கொள்ளும் திறன் ஆகியன பல கல்விசார் கலந்துரையாடல்களில் கலந்துரையாடப்பட்டு பாராட்டும் பெற்றது.Chokolaateசஞ்சிகையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘Redefining Classsroom’  கலந்துரையாடல் குழாமில், முகாமைத்துவ பணிப்பாளரும்/ ஒருங்கிணைப்பு அதிபருமான அனித்ரா பெரேராவும் அங்கம் வகித்திருந்தார்.Alethea International school   இன் அதிபர் புத்திகா பத்திரஜா, Space மற்றும் README ஒழுங்கு செய்திருந்த ‘Will the way our kids learn CHANGE after covid?’  என்ற தொனிப்பொருளில் அமைந்த குழு விவாதத்தில் கலந்துகொண்டிருந்தார். அனித்ரா பெரேராவின் எதிர்கால கல்வி தொடர்பான தொலைநோக்குப் பார்வையானது அவரது பெயர் Cosmopolitan Sri Lankaவின் 35 under 35 பட்டியலில் இடம்பெறுவதற்கு வழி செய்தது. . (https://cosmomag.lk/35under35/anitra-perera/)

“கல்வியானது எவ்விதமான மோசமான நிலைகளிலும் கைவிடப்படக்கூடாது என்ற கருத்தியலை நன்கு புரிந்துகொண்ட பாடசாலை முகாமைத்துவம் என்ற வகையிலும்,புதிய தலைமுறைக்கான கல்வியின் முன்னணியாளராக, தொடர்ச்சியான தொற்றுநோய் நிலைக்கு ஏற்பAletheaபலகட்ட முக்கிய தீர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. எனவே, மீளாய்வு செய்யும் போது, ​​எங்கள் நன்கு திட்டமிடப்பட்ட வீட்டு அடிப்படையிலான ஆய்வுத் திட்டம் இந்த கடினமான சகாப்தத்தில் நெகிழ்வான கற்றலை உறுதிசெய்வதுடன், தொற்றுநோய்க்கான சமூக விலகல் நெறிமுறைகளிலிருந்து மாணவர்கள் பாதுகாப்பாகவும் இருக்க உதவுகிறது,” எனAlethea குழுமப் பாடசாலைகளின்முகாமைத்துவ பணிப்பாளரும்/ ஒருங்கிணைப்பு அதிபருமான அனித்ரா பெரேரா தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட பாடசாலைகளை மூடுவதற்கான முடிவைத் தொடர்ந்து, Alethea நிர்வாகமானது, முறைப்படி திட்டமிடப்பட்ட கற்றல் முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன்படி திட்டமிட்டு , முழு மாணவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் விதத்திலும், May/ June 2020 Cambridge & Pearson Edexcel  பரீட்சைத் தொடர்களுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களின் உரிய கல்வி நோக்கு, தேர்ச்சியை பேணும் நோக்கிலும், ஆசிரியர்களை வளப்படுத்தும் முறைமையாக இது இருந்தது. இறுக்கமான முடக்கநிலையைத் தொடர்ந்து, சகல பரீட்சாத்தி மாணவர்களும், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களினால் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கற்றல் பொதிகளினூடாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள் கடந்தகால வினாப் பத்திரங்களைச் செய்து முடித்ததும், அவைஆசிரியர்களால் திருத்தப்பட்டு, மின்னஞ்சல் மூலமாக பின்னூட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு ஆசிரியர்கள் Zoom மூலம் நேருக்கு நேர் மாணவர்களை அணுகி தீர்வுகளை வழங்கியுள்ளனர்.

Match 13 முதல் April 8 வரையான ஆரம்பக்கட்டத்தின் போது, worksheet சார் வீட்டுக் கல்விக் கட்டமைப்பொன்று பாடசாலையால் பயன்படுத்தப்பட்டது.ஆனால் தூரதிஷ்டவசமாக மோசமாகிக்கொண்டே சென்ற COVID-19 நிலைமையால், worsheetsஐ திருத்துவதற்கு பாடசாலைகளில் சமர்ப்பிக்க முடியாதநிலை ஏற்பட்டது.GOSL இனால் April 20 விடுவிக்கப்பட்ட அறிவிப்புக்கமைய பாடசாலைகளை மீளத்திறக்கமுடியாத காரணத்தினால், Alethea நிர்வாகமானது இரண்டாம் கட்ட வீடு சார் கற்றல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.பாடங்கள் மிகத் தெளிவாகவும், படங்கள், காணொளிகள், மேலதிக வாசிப்புகளுக்கான web links ஐ உள்ளடக்கியதாகவும், ஆசிரியர்களால் உள்ளடக்கப்பட்டுள்ள தீர்க்கப்பட்ட உதாரணங்கள், விளக்கமான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகவும் இவை விளங்கின.இம்முறைமையானது மாணவர்களின் சுயகற்றல்/ மட்டுப்படுத்தப்பட்ட அல்லது முற்றிலும் ஆசிரியர்களின் மேற்பார்வையின்றி கற்றலைத் தொடர்வதற்கு ஊன்றுகோலாக விளங்கியது.

ஏற்கனவே டிஜிட்டல் பாடசாலை எண்ணக்கருவுடன் இணைந்திருந்த ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட வீட்டு கற்றல் பொதிகளுக்கு இணையாக, முழு கற்பித்தல் கற்றல் பொறிமுறையையும் ஒன்லைன் முறைக்கு மாறியது. Microsoft Office 365ஐ, மே மாத தொடக்கத்தில் எங்கள் கற்பித்தல் கற்றல் தளமாகப் பயன்படுத்தியதுடன், மெய்நிகர் வகுப்பறை ஊடாக மாணவர்களுக்கு அதிக கற்றல் அனுபவத்தை வழங்கினோம்.ஒவ்வொரு மாணவருக்கும், ஆசிரியருக்கும் Microsoft Office 365 கணக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நாம் H-One Technologies உடன் கைகோர்த்துள்ளதோடு அவர்கள் எமது ஊழியர்களுக்கு பயிற்சியளித்ததுடன், தொடர்ந்தும் சில மாதங்களுக்கு பயிற்சியளிப்பர். மாணவர்கள் விளக்கங்கள் மற்றும் தெளிவுபடுத்தலுக்காக ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது,” என பெரேரா மேலும் தெரிவித்தார்.

ஒன்லைன் கற்றலை செயற்படுத்துவதற்காக, பாடசாலை பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் தரவு சேவைகளுக்கான விசேட கழிவுகள் மற்றும் திட்டங்களை ஏற்பாடு செய்தது. அந்த வகையில், Softlogic உடன் இணைந்து மடிக்கணினிகள் மற்றும் டெப்களை தவணைக் கட்டண அடிப்படையில் மற்றும் சிறப்பு தள்ளுபடியில் கொள்வனவு செய்வதற்கு வழி செய்தது. மடிக்கணினிகள் இல்லாத பணியாளர்களுக்கு  பாடசாலை அதிகாரிகள் மடிக்கணினிகள் வழங்கினர். மேலும் பணியாளர்களுக்கு Dialogகுடன் இணைந்து விசேட விலையில் ரவுட்டர்கள் வழங்கவும், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து குழு பக்கேஜ்களை செயற்படுத்த தனியான நபர் மற்றும் ரவுட்டர்களை ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வீடுகளுக்கே வழங்க Alethea ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

அந்த வகையில், பாடசாலையானது தற்போது மெய்நிகர் முறையில் முன்பள்ளி முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தரங்களுக்கும், திறன் மையம் மற்றும் கற்றல் வள மையம் உள்ளடங்கலாக நடாத்தப்படுவதுடன், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வெளிப்படையான நடத்தை விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையானது ஆசிரியர்களுக்கு வழமையான பயிற்சியை தொடர்ந்து வழங்குகின்றது, ஏனெனில் அவர்கள் கற்பித்தல் செயல்முறையின் முக்கிய பங்காகும். பாடசாலையானது தனது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கற்பித்தல் செயன்முறையை  பாடசாலை வருடத்தின் 2020/2021 ஆம் ஆரம்ப கல்வியாண்டிற்கும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளது. பாடசாலையானது ஒன்லைன் மற்றும் கலப்பு கற்பித்தல் அணுகுமுறையை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதுடன்,  புதிய பாடசாலை வருடத்திற்கான அனுமதிகள் தற்போது செயன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Alethea School மற்றும்Alethea International Schoolபற்றி

Alethea School மற்றும் Alethea International School ஆகியன 1927 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், அடுத்த ஆண்டில் தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. 1954 ஆம் ஆண்டு பரீட்சைகள் திணைக்களத்தில் இரண்டாம் தர பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. 1968 ஆம் ஆண்டு முதல் Alethea மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு சிங்களம்இ தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தோற்றி வருகின்றனர். ஹப்புகல்ல / பெரேரா குடும்பங்களால் ஸ்தாபிக்கப்பட்ட இந்தப் பாடசாலையின் 4 ஆம் தலைமுறை நிர்வாகி அனித்ரா பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு: www.alethea.lk