ஜூலை முதல் வருமான வரியை மீள அறவிட அனுமதி

ஜூலை முதல் வருமான வரியை மீள அறவிட அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரண இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் செலுத்தப்படவிருந்த வருமான வரியை செலுத்த தவறியவர்களுக்கான அபராதத்தை அறவிடாதிருக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்தது என ரமேஷ் பத்திரண கூறினார்.

எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் தொடக்கம் மீளவும் வருமான வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.