உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ஷவினராலேயே முன்னெடுக்கப்பட்டது – ஹரின் அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ஷவினராலேயே முன்னெடுக்கப்பட்டது – ஹரின் அதிரடி

(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியது ராஜபக்ஷ அரசாங்கம் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன் என முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

தற்போது மாத்தறையில் இடம்பெற்று வரும் சமகி ஜன பலவேகய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் உரையாற்றுகையில் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 52 வீத வாக்குகளையும் சஜித் பிரேமதாச 42 வீத வாக்குகளையும் பெற்றிருந்தார். இங்கு இடம்பெற்ற சூழ்ச்சி என்னவென்றால் பௌத்த வாக்குகள் கோட்டபய ராஜபக்ஷவுக்கு கிடைத்தது அவ்வாறே சஜித் பிரேமதாசவுக்கும் கிடைத்தது. என்றாலும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மையப்படுத்தி கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்குகளை எவ்வாறு உடைப்பது என்றே அவர்களது திட்டம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த மாதமே ஒரு வார காலத்தினுள் சரியாக 28ம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோட்டாபய ராஜபக்ஷ தான் ஜனாதிபதியாக ஆவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இவைகள் அனைத்திலும் இருந்து மக்கள் யோசிக்க வேண்டும். ஏன் அவ்வாறு நான் கேள்வி ஒன்றினை முன்வைத்தேன் என்பது நீங்களும் உணர வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.