கொரோனா வைரஸ் – இரண்டாவது அலை அபாயமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியது

கொரோனா வைரஸ் – இரண்டாவது அலை அபாயமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை அபாயம் உள்ள நாடுகளின்  பட்டியலை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு மற்றும் முடக்க உத்தரவுகள் அமுல்படுத்தியுள்ளன.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் அல்லது உயிரிழப்புக்கள் குறைந்து வரும்  காரணத்தினாலும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்தகால புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை அபாயமுள்ள நாடுகளின் பட்டியலை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

குறித்த நாடுகளில் பட்டியலில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட அமெரிக்கா, ஈரான், ஜேர்மனி, சுவிட்சலாந்து ஆகிய நாடுகளிலும் இரண்டாவது கொரோனா அலைக்கான அபாயம் உள்ளதாகவும் உக்ரைன், பங்களாதேஷ், பிரான்ஸ், சுவீடன், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.