மியா கலிஃபா தற்கொலை முயற்சியில்?

மியா கலிஃபா தற்கொலை முயற்சியில்?

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் ஈர்க்கப்படும் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மியா கலிஃபா. உலகளவில் புகழ்பெற்று வந்த மியா 26 வயதில் 21 படங்களில் நடித்தும் வெறும் 15,000 அமெரிக்க டாலரை மட்டுமே சம்பாதிக்க முயன்றதால் அப்படிபட்ட படங்களில் நடிக்க போவதில்லை என்று பேட்டியொன்றில் கூறி நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

தற்போது அவரின் பெயரில் இணையதளத்தில் website ஒன்று உருவாக்கப்பட்டு அதில் வரும் விளம்பரங்கள் மற்றும் இதர பிராண்டிங் விளம்பரங்களில் மட்டும் 4 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் இணையதள பக்கங்கலுக்கு வராமல் ஓய்வெடுத்து வந்துள்ளார். இதனால் மியா கலிஃபா வேலையில்லாமல் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக வதந்திகள் இணையத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் மியா கலிஃபா அவரது டிவிட்டர் பக்கத்தில் ‘மூக்கில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் என்னால் சமுகவலைத்தளத்திற்குள் வரமுடியவில்லை’ என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், ‘எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் இறப்பு இரங்கலை தெரிவித்து பூங்கொத்துகளை கொடுக்கவில்லை என்று கவனித்து கொண்டிருக்கிறேன்’ என்று வேடிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.