உலகின் முதற்தர டென்னிஸ் வீரர் கொரோனாவில் இருந்து பூரண குணம்

உலகின் முதற்தர டென்னிஸ் வீரர் கொரோனாவில் இருந்து பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் |   செர்பியா ) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான Novak Djokovic பூரண குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Adria தொடர் என்ற பெயரில் நலன்புரி நிதி டென்னிஸ் கண்காட்சி போட்டிகள் கடந்த ஜூன் மாதம் செர்பியா மற்றும் குரோஷியாவில் Novak Djokovic இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த போட்டிகளில் பங்குப்பற்றிய முன்னணி டென்னிஸ் வீரர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி Novak Djokovic கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது

இதனைத்தொடர்ந்து கடந்த 10 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் Djokovic தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.