கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் பிளேக் நோய்

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் பிளேக் நோய்

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் (plague) நோயும் சீனாவில் பரவ தொடங்கியுள்ளது.

கடந்த வருடம் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த பிளேக் நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.

குறித்த பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பயன்னார் நகரம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கடந்த முதலாம் திகதி பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது. மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை உண்டதால் இவர்கள் பிளேக் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.